சித்திரை விழா

மிசௌரி தமிழ்ச்சங்க சித்திரை விழா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொண்டாடப்படும்.

கோயில் என்றாலே திருவிழா ; திருவிழா என்றாலே கோயில்என்ற நினைவு அனைவருக்கும் வரும். விழைவு : விழை என்றால் விருப்பம் என்று பொருள்படும். விழாக்கள் மகிழ்வை அடிப்படையாகக் கொண்டு மக்களால் விரும்பி நடத்தப் படுபவையாகும். கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே விழாக்களின் நோக்கமாகும். தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள் திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே விழாக்கள் நிகழ்ந்ததை ”மடியா விழாவின் யாணர் நன்னாடு” என்று புறநானூறு கூறுகின்றது. மடியா என்பது ஆண்டு தோறும் என்று பொருள்படும். அவ்வகையில், வேனிற்காலத்தினதும் வெயில் வேயத்துவங்குவதன் நிமித்தமும் குதூகலம் கொண்டு கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவையும் நம் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருகிறது.