Summer Picnic

மிசௌரி தமிழ்ச்சங்க கோடை உலா ஒவ்வொரு வருடமும் மே அல்லது சூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

ஊருக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு சோலைக்குச் சென்று, தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாகவும் ஒரு பகல் சமைத்துண்டு மகிழ்ந்த விழா, பொழில் விளையாட்டு எனப்பட்டது. சோலையை அடைந்தபின், அடிசில் தொழிலில்(அடுக்களைப் பணி) ஈடுபட்டவரொழிந்த ஏனையரெல்லாம் வெவ்வேறு வினையாற்றிட வெவ்வேறிடஞ்சென்று விடுவர். ஆடவருள் பெரியோர் வேட்டையாடவும், சிறியோர் மரமேறுதல் காய்கனி பறித்துண்டல், விளையாடுதல் முதலிய வினை நிகழ்த்தவும் பிரிந்துவிடுவர். பெண்டிருள் மூத்தோர் அடிசில் தொழிலில் அமர, இளையோர், மலர் கொய்து மாலை தொடுக்கவும், பாவை புனைந்து பாராட்டி மகிழவும், ஊஞ்சலமைத்து உந்தியாடவும், சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைக்கவும் ஆங்காங்கு அகன்றுவிடுவர். சிலர் கட்டமுது கொண்டு செல்வதுமுண்டு. அங்ஙனமாயின், அன்னார் அனைவரும் இன்ப விளையாட்டில் ஈடுபடுவர். நண்பகல் உணவுண்டபின், சில நாழிகை நேரம் இளைப்பாறி மாலைக் காலம் வீடு திரும்புவது இயல்பாகும். இத்தகு, பொழில் விளையாட்டு அல்லது பொழிலுலா(potluck)வினை இளவேனிற்காலத்தில் மேற்கொள்வது தமிழர் மரபு. அத்தகு மரபுவழியில், கோடைதோறும் நம் சங்கம் கோடைப் பொழில்விழாவையும் நடத்தி வருகிறது. அனைவரும் பங்கு கொண்டு பெருமை கொள்ள வேண்டுமென்பதே சங்கத்தின் விழைவாகும்.

Summer Picnic