Seminars/Workshops

கருத்தரங்கம்/பயிலரங்கம்

என்ன காரணம் அப்படிச் செய்ய? இருக்கும் புரிதலின் போதாமைதான். ஒவ்வா நடத்தை எப்படித் தொலையும்? சிறந்த அறிவு பெருக வேண்டும். அறிவை எப்படி அடைய முடியும்? அனைவர் தாமும் பயில வேண்டும். நிறைய எவரும் அறிவதும் பயிலுவதும் எப்படி? நீள முயன்றால் முடியும். குறைகள் தீர முயல்வதெப்படி? கூட்ட மக்கள் கிளர்ச்சி கொள்ளல் வேண்டும். கறைகள் போகா திருப்பதென்ன? நல்லநல்ல வாய்ப்புகள் கிட்டாமைதான். ஆகவே, வாய்ப்புகள் கிட்டாமையைப் போக்கிடவும் நம்மவர் அறிவுத் தேடலில் கிளர்ந்தெழவும், சீர்மிகுந்த வல்லுநர் கொண்டு, திறம்மிகுந்த கலைஞர் கொண்டு, கருத்தரங்கம் பயிலரங்கம் போன்றவற்றை அவ்வப்போது நம் சங்கமானது நடத்தி வருகிறது. படைதிரண்டு வந்து பங்கேற்று பயன்கொண்டு மேன்மையுறுதல் போற்றத்தக்கதாகும்.