Sports Tournament

விளையாட்டுப் போட்டிகள்

முத்தமிழ் அன்னாய், முழுதும் நாங்கள் ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது சோம்பிக் கிடக்கும் எமக்கும் நல்லது. முத்தமிழ் அன்னாய் வாழிய வாழியவே நீ. ஆடுவதிலே சுறுசுறுப்பும் மனமலர்ச்சியும் விளைவதாலே அது விளையாட்டு எனலாச்சு முத்தமிழ் அன்னாய், அறிய வேண்டும் அதை நீயே!! ஏற்றமும் தாழ்வும் வந்து போகும், வெற்றியும் தோல்வியும் ஒன்றுக்கொன்றாய் படியாய் அமைந்திடும். அதனைத்தானே பாங்காய்ப் பயின்றிடுவாய், மனத்தெம்பும் சோம்பல்முறிப்பும் விளைந்திடும் ஆட்டங்களாலே. தமிழே உறவே நம்மவரோடு ஆடிக்களித்திடுவாயே, வந்திடு நீயே. இணக்கமும் இன்பமும் பன்மடிப் பெருக்கம் கொண்டிடவே, பல்தரப்பட்ட போட்டிகளைத் தானே சங்கமும் நடத்த, நாமும் அதிற்பங்கு கொண்டிடுவோமே! பயனும் கொண்டிடுவோமே!! சங்கத்தால் நடத்தப்படும் விளையாட்டு, போட்டிகள் குறித்தான அறிவிப்புகளை அவதானித்துப் பங்களித்திட நீங்கள் முன்வந்திட வேண்டுமென அறிவுறுத்துகிறோம்